சனி, ஜனவரி 03, 2009

நல்லவரா ! கெட்டவரா !

நிங்க நல்லவரா ! கெட்டவரா ! - கவிதை யாருக்காக்!

விரல்கள் வேகமாக வந்தன.

விழிகளை நோக்கி!

“ஏன்? எதற்காக?” என்று;

வினா எழுப்பின விழிகள்.

“விரல்களாம் நாங்களும்

உன்னோடிணைந்துள்ள உடலின் பகுதிதானே?”

“அதிலென்ன சந்தேகம்?

அதற்காக இப்போதென்ன?”

“விழியில் நீரென்றால் துடைப்பது விரல் தானே?

விழிகோர் விபத்து வருமுன் பாய்ந்து

பழிக்க்கோர் இடமின்றி பத்து விரலும் சேர்த்து:

கண் மூடிக் காவல் காப்பதும் மெய் தானே?

விண் மூடி மேகம் சூழ்ந்தால் மழை பொழியும் அப்போது

தண்ணிலவும் தணல் கதிரும் மறைந்திருக்கும் என்பதாலே, இந்த

மண் மீது இனி அவை ஒளீயுமிழ வரக்கூடாது எனலாமா?

அவ்வாறே விரல்களாம் எங்களுக்கும்

அனுமதி தர வேண்டும் எனகேட்கும் உரிமை உண்டு!

நாங்கள் தானே நண்பராய் சேவகராயிருந்து உம்

நலன் காத்து வருகிறோம் கண்களே! அதனாலே...”

“அதனாலே என்ன?” என்றன விழியிரண்டும்:

அதற்கு விரல் சொன்னது:

கண்ணீர் துடைத்திடவும், கத்திட இமை சாத்திடவும்

கடமையாற்றும் எமக்கு: உமது

கருவிழியில் குத்திட மட்டும்

ஓரு உரிமையிலையோ?!”

எனக் கேட்ட கதை;

நல்ல கதையா? கெட்ட கதையா?

கருத்துகள் இல்லை: