வியாழன், ஆகஸ்ட் 19, 2010

போபால்

போபால் விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை
-பேராசிரியர் கே.ராஜூ
1984 டிசம்பர் 3 அன்று அதிகாலை யில் போபால் நகரம் அணுகுண்டு போடப் பட்ட ஹிரோஷிமா போல் காட்சியளித்தது என்றால் மிகையாகாது. யூனியன் கார் பைட் நிறுவனம் மெதில் ஐசோசய னேட்டை (ஆஐஊ) பெரிய 400 டன் தொட்டி களில் சேமிக்காமல் வழக்கமான பாது காப்பு ஏற்பாடான சிறிய பெட்டிகளில் சேமிப்பது என்ற வழிமுறை யைக் கை யாண்டிருந்தால் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டிருக்காது. விஷவாயுக் கசிவு ஏற் பட்டிருந்தாலும் அது சமாளிக்கக் கூடிய தாக இருந்திருக்கும். கம்பெனியின் செல வைக் குறைக்கும் முயற்சி மக்களைப் பலி கொள்வதில் முடிந்தது. மிகச் சிறிய நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்த தையும் ஊனமாக்கப்பட்டதையும் அவ் வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

விபத்து நடந்து முடிந்த நாட்களில் போபால் போர்க்களம்போல் காட்சியளித் தது. அந்த மோசமான சூழ்நிலையிலும் மிக்க மனஉறுதியுடன் டாக்டர் எஸ். வரத ராஜன் தலைமை தாங்கிய குழுவினர், விஷவாயுக் கசிவின்போது என்ன நடந் தது என்பதைக் கண்டறிந்து விஷவாயு வின் இரண்டாவது தொட்டியைப் பாது காப்பாகக் காலி செய்தது. இரண்டாவது முறையாக நடந்திருக்கக்கூடிய ஆபத்து இவ்வாறு தடுக்கப்பட்டது.

போபால் மக்களை விஷவாயு எப்படிப் பாதித்தது, அவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சையளிக்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க அன்று தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சாமவேதம் ஸ்ரீராமாச்சாரி, ஹரீஷ் சந் திரா ஆகிய இருவரையும் மறக்க முடி யாது. மிகத் துயரமான, குழப்பமான அந்த சூழ்நிலையில் -யூனியன் கார்பைட் பொய்யான பல தகவல்களை வெளியிட் டுக் கொண்டிருந்தபோதும் - அவர்கள் இருவரும் பாதிப்படைந்தோருக்கு அளித்த சிகிச்சை பற்றி எதிர்கால சந்த தியினருக்கு மீண்டும் மீண்டும் நினை வூட்டுவது அவசியம்.

ஹரீஷ் சந்திரா-ஸ்ரீராமாச்சாரி குழுவின் பணி

டாக்டர் ஹரீஷ் சந்திராவும் அவரது குழுவினரும் ஒரு சில நாட்களுக்குள்ளா கவே இறந்துபோன 200 பேர்களின் உடல் கள் மீது பிரேத பரிசோதனை நடத்தி அவர்களது மரணத்திற்கான காரணத் தை அறிய முயன்றனர். நுரையீரல் கள், உணவுக் குழாய், மூச்சுக் குழாய், கண் கள், இரத்தம் ஆகிய எல்லாமே பாதிப் படைந்திருந்தன. விஷவாயு ரத்த ஓட்டத் தில் கலக்க வாய்ப்பு இல்லை என்ற பொய் யான தகவலை யூனியன் கார்பைட் பரப் பிக் கொண்டிருந்தது. ஆஐஊ வாயு சிதை வடையும்போது சயனேட் உருவானதால் மரணம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கருதி சிகிச்சையளிக்க ஜெர்மனியிலிருந்து இந்தியா வந்த டாக்டர் மாக்ஸ் டாண்ட ரரை யூனியன் கார்பைட் திருப்பியனுப்பி விட்டது. ஆனாலும் அவரது கருத்தை ஏற்று சோடியம் தியோ சல்ஃபேட்டை நச்சுமுறி மருந்தாகப் பயன்படுத்த டாக்டர் ஹரீஷ் சந்திரா முடிவு செய்தார்.

இத்தருணத்தில் தில்லி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திலிருந்து போபாலுக்கு விரைந்து வந்து சிகிச்சை யளிக்கும் முயற்சிகளில் இணைந்து கொண்டார் ஸ்ரீராமாச்சாரி. பாதிப்படைந் தோரின் சிறுநீரிலும் இறந்தோர் உடலி லும் இருந்த சயனேட் அளவைக் கணிக்க தில்லி மருத்துவக் கழகத்துடன் தொடர்ச்சியாகத் தகவல்களைப் பரிமா றிக் கொள்ள வேண்டியிருந்தது. அது கைபேசிகள், இணையதளம் எல்லாம் இல்லாத காலம். நினைத்ததை முடிக்கும் வேகம் கொண்ட டாக்டர் வரதராஜன் கம்பியில்லா தகவல் தொடர்புக்கான ஒரு நிலையத்தையே போபாலில் நிர்மாணிக்க ஏற்பாடு செய்துவிட்டார் ! பாதிப்படைந் தோரின் இரத்தம், நுரையீரல், சிறுநீரகங் கள், ஈரல், இதயம் என எல்லா உறுப்பு களுமே சோதனைக்குள்ளாக்கப்பட்டன. மருத்துவக் குழுவின் ஆய்வுகள் இரத்தத் தில் ஹீமோகுளோபின் பாதிப்படைந் திருந்ததைத் தெளிவாக்கின. அந்த விபத்தில் உயிர் பிழைத்தோர் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர் ஆகி யோரை இரு தலைமுறைகளுக்கு சோதித்து மரபணுக் கோளாறுகள் ஏதும் உள்ளனவா என்பதைக் கவனித்துவர வேண்டும் என்றார் ஸ்ரீராமாச்சாரி (அண்மையில் இவர் காலமாகிவிட்டார்).

யூனியன் கார்பைட் நிறுவனம் `உண் மைகளை அமுக்கி பொய்களைப் பரப்பு’ என்ற அதன் கோட்பாட்டின் அடிப்படை யில் செயல்பட்டது. லாபவெறி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் பன் னாட்டு நிறுவனங்களின் செயல்பாடு களைக் கொண்டு பார்க்கும்போது அதில் ஆச்சரியமில்லை. ஆனால் மக்கள் நல னை மட்டுமே முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய `இறையாண்மையுள்ள, ஜன நாயக, சோஷலிசக் குடியரசா’ன நம் நாடு யூனியன் கார்பைடின் நோக்கத்திற்கு இணங்கி பணிந்து போவானேன்? `உல கின் மிக மோசமான தொழில்விபத்து’ என்று வர்ணிக்கப்படும் போபால் விபத்து நடந்து 25 ஆண்டுகள் கடந்த பிறகாவது இந்தக் கேள்வி மக்களிடமிருந்து எழுந்து அர சின் உறக்கத்தைக் கலைக்க வேண்டாமா?



நன்றி : தீக்கதிர்

கருத்துகள் இல்லை: